Keerthanaigal
![]() Click to enlarge |
|
ஸ்ரீ பிரும்ம ஜோதி
கீர்த்தனைகள்
அடியார்களுக்கு ஓர் விண்ணப்பம்
அன்புள்ள திருக்கூட மெய்யடியார் சமூகத்திற்கு,
மெய்வழி பேணி பொய்மை அகற்றி அறம் எனும் நற்கோலுடன் உலகம் எனும் இந்த மேடும், பள்ளமும் பல சோதனைகளும், இன்னல்களும் சூழப்பெற்ற இந்த பாதையில் ஊன்றி நடக்க துணிந்த உங்களுக்கெல்லாம், சர்வேஸ்வரன் அண்டபிண்ட ரக்ஷகணான நமது ஆயிரங்கோடி சூரிய பிரகாசத்திற்கும் உவமை காணரிய ஜோதியாண்டவ பரப்ரும்ம ஸ்வரூபத்திற்கு இயல்பேயான கருணையும், அருளும் கிடைக்கட்டும். ஆண்டவரது அருளால் பல ஆண்டுகளாகவே பண்களும், கவி, பா, கீர்த்தனாதிகளும் நமக்கு கிடைக்க பெற்றது அனைவரும் அறிந்ததே. இவற்றில் கவியும், பாவும் படிக்கவும், ஓதவும் கருத்தினை ஊன்றி அறிவதற்கும் ஏற்றது. கீர்த்தனைகள் இசைக்கப்படுபவை. இராகம், தாளம் போன்ற பண் இலக்கணத்திற்கு உட்பட்டது. பாமரரும், பண்டிதரும் செவிமடுக்க தடையற்ற, குறையற்ற வாய்பை தந்தருள்வது. இந்த ராகம் எனும் உயிரூட்டப்பட்ட மெய்யினை ஊட்டும் தேகமாகிய கீர்த்தனைகள் சில காலங்களாகவே அடியாரால் பாடி மகிழப்பெருகிறது. இராகம், கீதம் இவற்றுக்குள்ள இலக்கணம் போல், அதனை பாடும் அடியார்க்கும் சில விதிகள் இயல்பாகவே இருக்கிறபடியால் அதனை தெரியப்படுத்த விழைந்தது.
இத்துணை ஆயிரம் ஆண்டுகளாக எத்தனையோ மொழிகளில், எத்தனையோ பொருள்களில் பல லட்சம் கீர்த்தனைகள் இயற்றபெற்று அவை மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. அவற்றில் சில மறைந்தும், அழிந்தும் போனது. இந்த கீர்த்தனைகள் முக்கால்வாசி இறைவன், பக்தி, இயற்கை, அறம் போன்றவைகளை பற்றியதே. அவற்றில் மனித சமூகத்திற்கு பயனுள்ள, செரிவுள்ள கருத்தும், ஆழமும் இருக்கிறது. அப்படி இருந்தும் இவற்றை செவிமடுக்கும் மனதுக்கு அமைதியும், ஆனந்தமும் அந்த காலத்திற்கு தந்தாலும் அவை அவர்களின் அகத்தில் பெரும் பாதிப்பையும், தாக்கமும் தராதது ஏன் என்று நாம் அறிய முற்பட வேண்டும். பாடலும், இசையும் உடலும், உயிரும் போன்றது@ ஒன்றன்றி மற்றொன்று பயன்தரா. பாடலின் பொருளும், இசையின் அருளும் (The content of lyrics and the gracefulness of music) சேர்ந்தபடியே புரணத்தை தருகிறதெ அன்றி இராகத்தை மட்டும் நம்மை குதூகலிக்க செய்ய ஒரு வஸ்துவாய் கருதுவது அறியாமையிலும் சிறுமை. இதுகால் பெரும் மாற்றம் தராத காரணம் ~பொருள்| என்னும் பாடலின் மூல ஜீவனை தேடிக் கண்டு அவற்றில் மூழ்கி நம் வாழ்வில் செயல்படுத்தாமையினால் தான் என்பதுதான் துணிபு. அங்ஙனமே அடியாராகிய தாங்கள் எல்லாம் பெரும் சிரத்தை கொண்டு அதே தவற்றை மீண்டும் செய்யாதபடி பார்த்துக்கொள்ள வேண்டியது. நமக்கு அருளப்பட்ட இந்த கீர்த்தனைகள் இசைத்து மகிழ மட்டும் அன்று. அது நம் அகம் எனும் குகைக்குள் அந்த கீர்த்தனங்களின் பிழிந்த நறுஞ்சாற்றை கொண்டு சென்று அதை மனந்தெளிய பருகுவதற்குமே ஆகும். குறுகிய கால மனபுத்துணர்வுக்கென்று ஆண்டவர் நமக்கருளிய பாக்களை கொள்ளாமல், நமை மேல்நிலைக்கேற்றும் ஞான விமானமென கொள்ள தக்கதென்பதை உணர இறைவர் கிருபை செய்யவேண்டும். இசையை சான்றோர் நாதப்ரும்மம் என்பர். அதை உபாசிப்பவன் நாத பிரும்ம யோகியாவர். அழயவர் தங்களுக்கு நம் பிரம்ம ஜோதி ஆண்டவரும், நாத பிரும்மமும் ஒன்றே ஆன படியால் நமக்கு இரட்டிப்புபேறு கிட்டியிருக்கின்றது அவரின் திருஉள்ளம். ஆண்டவரின் திருக்கருணை, திருவருளுக்கும் வந்தனை பல செய்துகொண்டு இந்த மடலை நிறைவு செய்கிறோம்.
இங்ஙனம்
பரிபூரணம்
Your Review: Note: HTML is not translated!
Rating: Bad Good
Enter the code in the box below:

Categories
Brands
Information
Shopping Cart
Bestsellers









Featured
